• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை – பிசிசிஐ விளக்கம்

July 11, 2017 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

இந்திய கிரிகெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரங்களான சச்சின், கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமன் ஆகியோர் அடங்கிய குழு நேர்காணலை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என்று கங்குலி தெரிவித்திருந்தார். இந்நிலையில், கேப்டன் கோலியுடனான ஆலோசனைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2019 உலக கோப்பை வரை பயிற்சியாளராக இருப்பார் என பிசிசிஐ அறிவித்தாக செய்திகள் பரவின.

ஆனால், இந்த செய்தியை பிசிசிஐ மறுத்துள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்க