• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘மூளை ஸ்கேனர்’ என்னும் புதிய கருவி கண்டுபிடிப்பு

July 5, 2017 தண்டோரா குழு

மனித மூளையில் ஏற்படும் நோய்களை தெளிவாக அறிந்துக்கொள்ள ‘மூளை ஸ்கேனர்’ என்னும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதன் உயிர்வாழ இதயம் எவ்வளவு முக்கியமோ அதே போல் அவனுடைய மற்ற பாகங்கள் செயல் திறனுக்கும், எண்ணங்கள், நினைவுகளுக்கு மூளை தான் முக்கியமானதாகும்.

உடலில் நோய்கள் ஏற்படுவதுபோல் மூளையிலும் நோய்கள் ஏற்படுவதுண்டு. மூலையில் ஏற்படும் நோய்களை தெளிவாக அறிந்துக்கொள்ள மூளை ஸ்கேனர் என்னும் புதிய கருவி ஒன்றை பிரிட்டனை சேர்ந்த கார்டிப் பல்கலைக்கழக மூளை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மூளை ஸ்கானரை பயன்படுத்தி பிரிடன்னை சேர்ந்த கார்டிப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இமேஜிங் மையம் மூளையில் ஸ்கேன் செய்தது. சீமென்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் புதிய கணினி கருவிகளை பயன்படுத்தி மூளையின் பகுதிகளை சிவப்பு, பச்சை என்று 3d வடிவங்களாக உருவாகியுள்ளனர்.

இந்த கருவியை பயன்படுத்தி மூளையின் செயல்பாடுகள், மூளையில் ஏற்படும் வலிப்பு நோய் , புற்றுநோய் நோய் மற்றும் மூளையில் ஏற்படும் கட்டிகளை கண்டறியவும், மூளையை தொடாமலேயே சிகிச்சை கூட செய்ய முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க