• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைள் குறித்து மக்களுக்கு விளக்கம்

July 5, 2017 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் குறித்து மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி மக்களுக்கு விளக்கம் அளித்தார்.

கோவையில் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தடுப்புப் பணிகளை மண்டல வாரியாக தீவிர கண்காணிப்புடன் சிறப்பு கவனம் செலுத்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நீர்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுதல், தேவையற்ற பொருட்களை அகற்றுதல் தேவையற்ற பழைய டயர்கள், உபயோகமற்ற மண் பாண்டங்கள், குடங்கள், ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வீடுகளில் உள்ள பிரிட்ஜ், அழகுக்காக வளர்க்கப்படும் பூந்தொட்டிச் செடிகள் ஆகியவற்றில் உள்ள தண்ணீரினால் கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் உள்ளது. எனவே, அவற்றை அவ்வப்போது தேவைக்கேற்ப தூய்மை செய்ய அல்லது குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை தூய்மை செய்ய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியால் வீடு வீடாக சென்று புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், குடிதண்ணீரில் குளோரின் அளவு சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் மாநகர பொறியாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி தெற்கு மண்டலம், வார்டு-97, பிள்ளையார்புரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் டெங்கு தடுப்பு நடவடிக்கைள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார்.

மாநகராட்சியில் பணிபுரியும் 65 கொசு ஒழிப்பு பணியாளர்கள், கிருஷ்ணா கல்லூரி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் 100 பேர், கொசு ஒழிப்பு பணிகள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க