• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எய்ம்ஸ் குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் – மத்திய அரசு

June 22, 2017 தண்டோரா குழு

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் எங்கு அமைவது என்பது குறித்து தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க, மத்திய குழு ஆய்வு செய்தது. அதன்பின், மத்திய அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்தது. அந்தப் பதில் மனுவில் ‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்’ என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் படிக்க