• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமுகை வனப்பகுதியில் மயங்கிவிழுந்த யானை மீண்டும் காட்டுக்குள் சென்றது

June 21, 2017 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் அருகே பவானிசாகர்அணை நீர்தேக்க பகுதியில் தண்ணீர் அருந்த வந்த போது உடல் சோர்வால் மயங்கிவிழுந்த 5௦ வயது பெண் காட்டுயானை வனத்துறை மருத்துவர்கள் சிகிச்சையால் மீண்டும் எழுந்து காட்டுக்குள் சென்றது.

கோவைமாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்தேக்கப்பகுதியில் தண்ணீர் அருந்த காட்டு யானை கூட்டம் வந்தது. அதில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் காட்டுயானை ஒன்று உடல் சோர்வு காரணமாக நேற்று அங்கேயே மயங்கி சரிந்தது.

கீழே விழுந்த யானை மீண்டும் எழுந்திருக்க இயலாமல் தவிப்பது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் அசோகன் ஆகியோர் யானையின் உடலை பரிசோதித்தனர்.

அதன் பின் யானைக்கு பிடித்தமான வாழை, கரும்பு போன்ற உணவுகளை வழங்கினார்கள். அதன் உடல் சோர்வு நீங்கவும் தேவையான சத்துக்களை பெறவும் குளுக்கோஸ் மற்றும் வைட்டமின் சத்து மருந்துகளை ஊசி மூலம் யானையின் உடலில் செலுத்தி சிகிச்சையளித்தனர்.

யானையால் எழுந்து நிற்க இயலாமல் படுத்தபடியே இருந்தது. வயது முதிர்வு காரணமாக சோர்வுற்று கிடக்கும் யானைக்கு சிகிச்சையும் கண்காணிப்பும் தொடர்ந்து நடைப்பெற்றது.

இந்நிலையில் நள்ளிரவு அந்த யானை ஜே.பி.சி. உதவியுடன் எழுந்து நின்றது. அதன் பின் தன்னுடன் வந்த யானை கூட்டத்துடன் திரும்பி காட்டுக்குள் சென்றது.

கடந்த மூன்றாண்டுகளாகவே கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை வனச்சரக பகுதிகளில் போதிய அளவில் மழைப்பொழிவு இல்லை. இதனால் காடுகளில் வறட்சி ஏற்பட்டு யானை போன்ற மிகப்பெரிய வன உயிரினங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

போதிய தீவனமின்றி தாகம் தீர்க்க நீண்ட தொலைவு பயணித்து அணையின் நீர்தேக்க பகுதிக்கு வரும் யானைகளில் சில இது போல சோர்வுற்று விழுந்து விடுகின்றன என்பதால் வனப்பகுதியில் ஆங்காங்கே யானைகளுக்கு தண்ணீர் கிடைக்க வனத்துறை போதிய கவனம் செலுத்த வேண்டும் என்று வனஉயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க