• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘மாணவர்களுக்கு யோகா பாடம் கற்றுத்தரப்படும்’ – ஆளுநர் வித்யாசாகர் ராவ்

June 21, 2017 தண்டோரா குழு

தமிழகம் மாற்றும் மகாராஷ்டிராவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு யோகா பாடம் கற்றுத்தரப்படும் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று பல இடங்களில் யோகா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;

“சர்வதேசயோகா தினத்தின் நோக்கம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான்.யோகாவை இந்தியா உலக மக்களுக்கு பரிசாக அளித்துள்ளது. போதைக்கு அடிமையாக உள்ள இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து தடுக்கும் கருவியாக யோகா உள்ளது.

தமிழகம் மாற்றும் மகாராஷ்டிராவில் எனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு யோகா பாடம் கற்றுத்தரப்படும்” என்றார்.

மேலும் படிக்க