• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லண்டன் தீ விபத்தின் தொடரும் சோகம்! ஒரே அறையில் 42 கருகிய உடல்கள் கண்டெடுப்பு

June 20, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரில் கடந்த ஜூன் 13ம் தேதி அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 600 பேர் இந்த குடியிருப்பில் வசித்தனர்.25 மணி நேரம் கழித்து தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதாக அந்தநாட்டு அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையில் தீ அணைக்கப்பட்ட பின்னும் மீட்பு பணிகள் ஒருவாரம் கடந்தும் இன்னமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தீயணைப்புபடை வீரர் ஒருவர் தேடுதல் பணியில் இருக்கும்போது ‘ஒரே அறையில் மட்டும் 42 கருகிய உடல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இறந்தவர்களின் உடலை மீட்பதற்கான முயற்சியில் லண்டன் அரசு இறங்கியுள்ளது.

ஏற்கனவே இந்த தீ விபத்து சம்பவம் லண்டன் மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில் ஒரே அறையில் 42 உடல்கள் கருகிய நிலையில் எடுக்கப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க