• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்னும் 60 நாட்கள் தான் காத்திருப்பேன் -டிடிவி தினகரன்

June 20, 2017 தண்டோரா குழு

இன்னும் 60 நாட்களில் நானே களமிறங்கி அதிமுக இரு அணிகளையும் இணைக்க முயற்சிப்பேன் என டிடி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க.,வின் துணை பொதுச் செயலாளர் தினகரன்,

பிரிந்திருக்கும் அதிமுக இரு அணிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் விரைவில் நானே களமிறங்குவேன். நான் சிறையில் இருந்தவரை கட்சியை இணைக்க முயற்சி மேற்கொள்ளப் படவில்லை.இன்னும் 60 நாட்களில் நானே களமிறங்கி அதிமுக இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்வேன் என்றார்.

மேலும், தி.மு.க., தொடர்ந்து கூறிவரும் குற்றச்சாட்டான கூவத்தூர் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., மட்டுமின்றி, பன்னாட்டு காவல்துறையான, இன்டர்போல் விசாரணைக்கும் தயார். எங்களுக்கு மடியில் கனமில்லை; அதனால் எந்த விசாரணைக்கும் பயமில்லை என டிடிவி தினகரன் கூறினார்.

மேலும் படிக்க