• Download mobile app
15 Oct 2026, ThursdayEdition - 3900
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் எந்த நீதிமன்றத்தையும் அவமதிக்கவில்லை – விஜய் மல்லையா

June 13, 2017 தண்டோரா குழு

நான் எந்த நீதிமன்றத்துக்குவராமல் தலைமறைவாக செல்லவில்லை எனவும் எந்த நீதிமன்றத்தையும் நான் அவமதிக்கவில்லை எனவும் தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

இந்தியாவில் பொதுத்துறை வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி திரும்ப செலுத்தாமல் தலைமறைவாக லண்டனில் வசித்து வரும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இன்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பின்னர் வெளிவந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,

நான் 1992 முதல் லண்டனில் வசித்து வருகிறேன். எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, ஜோடிக்கப்பட்டவை. எனது தரப்பு நியாயத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் என்னிடம் உள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும் நான் எந்த நீதிமன்றத்துக்கு வராமல் தலைமறைவாக செல்லவில்லை எனவும்எந்த நீதிமன்றத்தையும் நான் அவமதிக்கவில்லை எனவும் மல்லையா தெரிவித்தார்.இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் படிக்க