• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூவத்தூர் விவகாரம் குறித்து விசாரணை நடத்த கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு

June 13, 2017 தண்டோரா குழு

கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு பணப்பட்டுவாடா வழங்கப்பட்டது குறித்து ஊடங்களில் வெளியான விடியோ தொடர்பாக விசாரணை நடத்த திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெற்றது.

எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ-க்களுக்கு கோடிகளில் பணம் கொடுக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் ஓன்று அம்பலப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் முறையிட்டார். அதில் எம்.எல்.ஏ-க்களுக்கு பேரம் பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்,

ஜூலை 11-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரப்பட்டது. மேலும் பேரம் பேசப்பட்ட விகாரத்தை சிபிஐ அல்லது வருவாய்துறையினர் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இதனையடுத்து உரிய ஆதாரங்களுடன் மனுவாக தாக்கல் செய்தால், திமுக-வின் முறையீடு குறித்து வரும் 16-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க