• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை இலைசின்னத்தை மீட்க 4 லாரிகளில் ஆவணங்கள் தாக்கல் செய்த அமைச்சர்

June 12, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக டில்லி தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் சசிகலா அணி சார்பில், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணி இரண்டு அணிகளாக பிரிந்தது. இதையடுத்து இரு அணிகளும் இரட்டை இலை சின்னதை உரிமை கொண்டாடி வருகிறது. இதற்காக இரு அணிகளும் பிரமாண பத்திரங்கள் தலைமை தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்து வருகிறது.

இந்நிலையில்ம, சசிகலா அணி சார்பில் 4வது முறையாக இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 4 லாரிகளில் எடுத்து வரப்பட்ட 1,52,000 பிரமாணப் பத்திரங்களை சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார். இதுவரை சசிகலா தரப்பில் 3,10,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வாரம் ஓபிஎஸ் தரப்பில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று சசிகலா தரப்பினர் ஆவணங்கள் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க