• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிகினி உடையை கிண்டலித்தவர்களுக்கு சமந்தா பதிலடி

June 10, 2017 தண்டோரா குழு

நடிகை சமந்தாவும் நடிகர் நாகசைதன்யாவும் விரைவில் ஹைதராபாத்தில் திருமணம் செய்யவுள்ளார்கள். இதற்கிடையில்,சமந்தா தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஷியாக நடித்து வருகிறார்.

தமிழில் விஜய், விஷால், விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து வரும் சமந்தா ராம் சரண் ஜோடியாக தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகை சமந்தா.

இதற்கிடையில் நடிகை சமந்தா தனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அப்படி சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்கு செல்வதாக இன்ஸ்டாகிராமில் ஒரு ஃபோட்டோவை பதிவிட்டிருந்தார். அந்த ஃபோட்டோவில் அவரது பிகினி உடை இருந்ததால் பலரும் அவரை விமர்சித்து கருத்து பதிவிட்டனர்.

இதனால் கோபமடைந்த சமந்தா, ” ஒரு பெண் எப்படி உடை அணிகிறாள் என்பதை வைத்து தான் நீங்கள் ஒருவரை மதிப்பிடுவீர்களா? உங்களது எண்ணங்களை நினைத்து நான் மிகவும் வெட்கப்படுகிறேன் நீங்களும் வெட்கப்படவேண்டும்” என பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்க