• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் வாலிபர் கொடூரமாக குத்திகொலை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

June 9, 2017 தண்டோரா குழு

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ராயபுரம். நகரின் மையப்பகுதில் அமைந்துள்ள பிரதான ஓட்டல் அருகே இன்று காலை வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், திருப்பூர் வடக்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வாலிபரின் சட்டைப்பையில் இருந்த ஆவணங்களை சோதனை செய்தபோது கிடைத்த ஓட்டுனர் உரிமத்தில் இறந்தவர் பெயர் ஹரீஸ் என்றும், திருப்பூரை அடுத்த இடுவம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.மேலும் ஹரீக்ஷை கத்தியால் குத்திகொலை செய்ததும் தெரியவந்தது.

நள்ளிரவில் நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டு முற்றிய நிலையில் ஹரீக்ஷை ஓடஓட விரட்டி கத்தியால் குத்தி கொடூரமாக தாகுதலுக்குள்ளாகி இறந்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி பின்னர் திரும்ப வந்தது.

முன் விரோதம் காரணமா அல்லது பெண் விவகாரம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹரீக்ஷின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மக்கள் நடமாட்டம் அதிக முள்ள இப்பகுதியில் வாலிபர் கொடூரமாக கொலை செய்து சாக்கடையில் வீசிச் சென்ற சம்பவம் பொது மக்கிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க