• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவரின் கழுத்தை நெறித்து கொன்ற மனைவி !

June 9, 2017 தண்டோரா குழு

கோவை அடுத்த இருகூர் பகுதியில் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட கணவனை, அவரது மனைவி கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த இருகூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினமும் மது அறிந்திவிட்டு தனது மனைவி பாரிமளாவிடம் தகராறில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு ஈஸ்வரன் வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது மனைவி பரிமாளவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் பரிமாளா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

சம்பவத்தன்று ஈஸ்வரன் வழக்கம் போல் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், அந்த தகராறில் அவரது மனைவி பரிமளா அவர் கழுத்தை நெறித்து கொன்றதாகவும் காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பரிமாளா மற்றும் கொலையை மறைக்க உடந்தையாக செயல்பட்ட பரிமளாவின் அண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க