• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாட்டியை விழாவிற்கு அழைத்து சென்ற பேரன்

June 6, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் பள்ளியில் நடந்த விழாவிற்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது பாட்டியை அழைத்து சென்ற பேரனின் அன்பைக்கண்டு அங்குள்ள மக்கள் நெகிழ்ச்சி அடைந்து, அவனை பாராட்டியுள்ளனர்.

அமெரிக்க நாட்டின் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் இறுதி ஆண்டு முடிவில் “prom” என்னும் விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி, வெர்ஜினியா மாகணத்தில்,Stafford High Schoolல் “prom” விழா நடைபெற்றது. அந்த பள்ளியில் படித்து வந்த ஸ்டீபன் வேர்ஜில்(17) என்னும் மாணவன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய 92 வயது பாட்டி ஜூலியா ஜர்மனை, தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

இவ்வாண்டின் தொடகத்தில் ஜூலியாவிற்கு புற்றுநோய் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. சில மாதங்கள் தான் அவர் உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த ஸ்டீபன், ஜூலியாவிற்கு விஷேசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். ஸ்டீபன் மற்றும் அவருடைய தாயார் பாம் வேர்ஜில் ஸ்டீபனின் பள்ளி தலைமையாசிரியரை சந்தித்து, பள்ளியில் நடக்கவிருக்கும் “prom” விழாவிற்கு ஜூலியாவை அழைத்து வர அனுமதி கேட்டுள்ளனர். அவரும் அனுமதி அளித்துள்ளார்.

ஜூலியா நீல நிற ஆடை அணிந்து, முதல் முறையாக அந்த விழாவில் கலந்துக்கொண்டார். பள்ளியில் நடந்த அந்த விழா நாளில் ஜூலியாவின் பிறந்த நாளும் வந்தது. இதுவே அவருக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியை தந்துள்ளது.

விழா நடந்த இடத்திற்கு வந்ததும், ஸ்டப்போர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜூலியாவிற்கு பூங்கொத்தும் கிரீடமும் வழங்கியுள்ளார். விழாவின் இசை நிகழ்ச்சியில் ஜூலியாவிற்கு பிடித்த பிரபல ஆங்கில பாடகர் “Elvis Presley” பாடிய ‘Can’t help falling in love’ பாடலும் இடம்பெற்றது.

“என்னுடைய பாட்டிக்கும் சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால் அவரை என்னுடைய பள்ளியில் நடந்த விழாவிற்கு அழைத்து வந்தேன். என்னோடு நடமாடிக்கொண்டு “Elvis Presley” பாடிய ‘Can’t help falling in love பாடலை பாடிக்கொண்டிருந்தார். பாட்டியுடன் செலவழித்த அந்த இரவை நான் ஒருநாளும் மறக்கமாட்டேன்” என்று ஸ்டீபன் கூறினார்.

மேலும் படிக்க