• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

June 1, 2017 தண்டோரா குழு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23, டீசல் விலை லிட்டருக்கு 89 பைசாக்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் அமலானது.

விலை உயர்வை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.49-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.58.96-க்கும் விற்கப்படுகிறது. கடந்த 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.16, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.10 குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க