• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

’ஸ்பைடர்” டீசர் மே 31-ஆம் தேதி வெளியீடு..!

May 30, 2017 tamilsamayam.com

மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள “ஸ்பைடர்” படத்தின் டீசர் நாளை வெளியிடப்பட உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள “ஸ்பைடர்” திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீசர், நாளை(மே 31) மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி கடைசி நேரத்தில் மீண்டும் படமாக்கப்பட்டதால், இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கக் கூடிய மகேஷ் பாபு நடித்துள்ள முதல் நேரடி தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க