• Download mobile app
18 Mar 2026, WednesdayEdition - 3689
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஷாலுக்கு வில்லியான வரலட்சுமி

May 29, 2017 தண்டோரா குழு

விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி விஷாலுக்கு மாஸ் ஹிட் கொடுத்த படம் ‘சண்டக்கோழி’.

கோலிவுட்டில் மிகவும் பிஸியாக இருக்கும் விஷாலின் கைவசம் ‘இரும்பு திரை’, ‘துப்பறிவாளன்’ மற்றும் ‘கருப்பு ராஜா, வெள்ளை ராஜா’ ஆகிய படங்கள் உள்ளன. தற்போது இந்த வரிசையில் சண்டக்கோழி இரண்டாம் பாகமும் சேர்ந்துள்ளது. இப்படத்தின் வேலைகள் மும்புரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளார்.

மேலும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கவுள்ளதாகவும், அவர் இந்த படத்தில் அவர் விஷாலுக்கு வில்லியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஷால், வரலட்சுமி ஆகியோர் இணைந்து ‘மதகஜ ராஜா’ என்ற படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் ஒருசில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஜூலையில் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க