• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“Western Wall” மீது கை வைத்து பிராத்தனை செய்த அமெரிக்க அதிபர்

May 23, 2017 தண்டோரா குழு

இஸ்ரேல் நாட்டிற்கு அரசு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், அங்குள்ள புனித தளமான Western Wall மீது கை வைத்து பிராத்தனை செய்தார்.இங்கு பிராத்தனை செய்த முதல் அமெரிக்க அதிபர் இவரே ஆவார்.

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அரசு பயணமாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ளார். எருசலேமில் உள்ள யூதர்களின் புனித தளமான Western Wall பார்க்க அவருடைய மனைவி மெலானியா, மகள் இவாங்கா மற்றும் யூத மருமகன் ஜாரெட் குஷனர் ஆகியோருடன் சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர், யூதர்கள் அணியும் தொப்பியை அணிந்து, சுவற்றின் மீது தனது வலது கையை வைத்து, சில நிமிடங்கள் அமைதியாக பிராத்தனை செய்தார். யூத முறைப்படி, பிராத்தனை விண்ணப்பங்களை அந்த சுவற்றின் இடுக்கில் வைப்பது வழக்கம். அதேபோல், அதிபர் டிரம்பும் ஒரு விண்ணப்பத்தை சுவர் இடுக்கில் வைத்துள்ளார்.

அதன்பிறகு, யூத முறைப்படி ஆண்கள் பிராத்தனை செய்யும் அறைக்கு அவரும் அவருடைய மருமகனும் சென்றனர். அவருடைய மனைவியும் மகளும் பெண்கள் பிராத்தனை செய்யும் அறைக்கு சென்றனர். ஒரு தடுப்பு சுவரால் இரண்டு அறைகளும் பிரிக்கப்பட்டுள்ளது.

யூத மக்களின் புனித இடமாக Western Wall கருதப்படுகிறது. அங்குள்ள அல் அக்சா மசூதிக்கு கீழ் இந்த இடம் அமைந்துள்ளது. இஸ்லாமிய புனித தளமான மெக்கா மற்றும் மெதினாவிற்கு அடுத்த புனித தளமாக இந்த இடம் கருதப்படுகிறது. அமெரிக்க அதிபரின் வருகையை அடுத்து, அந்த இடம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க