• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்டப்பா குறித்த கேள்விக்கு தன் ஸ்டைலில் பதிலளித்த தோனி

May 19, 2017 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல வெற்றி சாதனைகளை படைத்தவர் தோனி. பொதுவாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எந்த கேள்வியாக இருந்தாலும் தனது ஸ்டைலில் கூலாக பதிலளிப்பார் தோனி. அவரது ஓய்வு குறித்த ஒரு நிரூபர் குறித்த கேள்விக்கு பதிலளித்த விதம் குறித்து பெரிதும் பேசப்பட்டது.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோனி கலந்துக்கொண்டார்.
அப்போது அங்கு பலரும் அவரிடம் சாம்பியன் ட்ராபி குறித்து கேள்வி கேட்டனர். இதற்கிடையில் ஒரு நிரூபர் ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் தெரியுமா?’ என கேட்டார்.

தோனி சற்றும் யோசிக்காமல் ‘யார் இங்கு அந்த படத்தை பார்த்தீர்கள்?’ என கேட்க, அனைவருமே கையை தூக்கினார்கள்.உடனே தோனி ‘இதற்கான விடையை அவர்களிடமே கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்’ என தன் ஸ்டைலில் கூலாக விடையளித்து கிளம்பினார்.

மேலும், பாகுபலி-2 பார்ப்பதற்கு இன்னும் தனக்கு நேரம் கிடைக்கவில்லை என்றும் நேரம் கிடைத்தால் கண்டிப்பாக பார்ப்பேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க