• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமல் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தும் மறுத்தாரா ராஜ்கிரண்?

May 17, 2017 தண்டோரா குழு

உலக நாயகன் கமல் ஹாஸன் முதல் முறையாக பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்நிகழ்ச்சிக்காக ராஜ்கிரணுக்கு அழைப்பு விடுத்தும் அவர் வர மறுத்துவிட்டார் என்ற செய்தி பரவி வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் நடிகர் ராஜ்கிரணுக்கு எப்போதுமே ஒரு தனி மதிப்பும், மரியாதை உண்டு. நடிகர் ராஜ்கிரண் பணம் கிடைக்கும் என்பதற்காகவிளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அதற்கு தகுந்த காரணத்தை அந்த நிறுவனத்திடமே மிக தைரியமாக கூறியதும், இலங்கை தமிழர் பிரச்சனை என்பது ஒரு உலக அளவிலான பிரச்சனை என்று பேசியதும், ‘தல’ அஜீத் மற்றும் தனுஷ் போன்ற நடிகர்களின் பெருந்தன்மை பற்றி பேசியது ஆகியவை ராஜ்கிரனை பற்றி சமீபத்தில் சமூகவலைத்தலங்களில் வைரலான விஷயங்கள்.

இந்நிலையில் அவரே எதிரிப்பார்த்திடாத ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடிகர் ராஜ்கிரணுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், ஆனால் எனக்கு கோடிகள் பெரிதல்ல, கொள்கைதான் முக்கியம் என்று கூறி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டாராவும் கூறப்படுகிறது.

மேலும்,உலக நாயகன் கமல் ஹாசனே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடியாது என்று தைரியமாக நடிகர் ராஜ்கிரண் கூறி விட்டதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

இதுக்குறித்து ராஜ்கிரண் கூறும்போது,

இந்த செய்தி உண்மையில்லை கமல்ஹாசனோ நிகழ்ச்சி நடத்தும் நிறுவனமோ, யாரும் இது விசயமாக என்னிடம்பேசவில்லை. பேசினாலும்நான் அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்பது மட்டும் உண்மை என்றார்.

மேலும் படிக்க