• Download mobile app
11 May 2026, MondayEdition - 3743
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வித்யா பாலனுக்கு கொடுத்து வைக்கல..!

May 10, 2017 tamil.samayam.com

பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நடிகை வித்யா பாலன் மறுத்துள்ளார்.

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் அடுத்த படத்திலும் ரஜினி நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 28-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார்? என தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை.

ரஜினி கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகை வித்யா பாலன் பொறுத்தமாக இருப்பார் என ரஞ்சித் விரும்பியதால், இது குறித்து படக்குழுவினர் வித்யா பாலன் தரப்பினரிடம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தினர். ரஜினியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்த நடிகை வித்யா பாலன் அதற்கான கால்ஷீட்டையும் அளித்தார்.

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பை துவங்க முடியாததால், வித்யா பாலன் அளித்த தேதிகள் வீணாகின. இந்நிலையில் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் படக்குழுவினர் வித்யா பாலனை அணுகினர். ஆனால் அந்த தேதிகளை வேறு ஒரு பாலிவுட் படத்திற்கு அளித்துவிட்டதாக வித்யா பாலன் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதன் காரணமாக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் நடிகை வித்யா பாலன் கனவு கைகூடவில்லை.

மேலும் படிக்க