• Download mobile app
11 Jun 2026, ThursdayEdition - 3774
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்பியால் உயிரிழந்த அரியவகை டால்பின்.

March 3, 2016 Sky News

உலகளவில் செல்பி என்ற ஒரு காரணத்திற்காக உயிரையும் பணயம் வைப்பவர்கள் அதிகரித்து வந்துள்ளனர். அறிவுப்பூர்வமாக எடுக்கப்படும் எந்த ஒரு செல்பியும் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெறுகின்றன.

ஆனால் கிறுக்குத்தனமாக எடுத்து அதைப் பதிவிட்டு அதிலும் மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பவர்கள் தற்போது அதிகரித்துள்ளனர். இதில் மற்ற உயிரினங்களைப் பற்றி கவலைப்படாமல் செயல்படுபவர்கள் மிகவும் கொடூரமானவர்கள். மனிதன் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும்போது செல்பி எடுத்துப் போடுபவர்கள் இந்த ராகம் தான்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சமீபத்தில் அர்ஜென்டீனாவில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அர்ஜென்டீனாவில் உள்ள சான்ட டேரிசிட என்ற இடத்தில் ஒரு கடற்கரை ரெஸ்டாரென்ட் உள்ளது. அதில் தங்கியிருந்தவர்களும், அருகில் விளையாடி வந்தவர்களும் திடீரென ஒரு அதிசயத்தைக் கண்டனர்.

அது உலகில் மிகவும் அரிதானதாகக் காணப்படும் பிரான்சிச்கான என்ற டால்பின் குட்டி ஒன்று தன் தாயுடன் கரைக்கு வந்தது. இதைக் கண்ட அனைவரும் குட்டியை எடுத்துக் கொஞ்சியதோடு அதனுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அடுத்தடுத்து அனைவரும் அந்தக் குட்டியுடன் செல்பி எடுக்க அது நீண்டநேரம் நீரை விட்டு வெளியே இருந்ததால் இறந்து விட்டது.

இதையடுத்து இறந்த டால்பினுடனும் செல்பி எடுத்துக்கொண்ட சுற்றுலா பயணிகள் அதை அப்படியே மணலில் வீசிவிட்டுச் சென்றனர். இதையடுத்து தகவலறிந்து வந்த அர்ஜென்டீனா விலங்குகள் நல அமைப்பு ஒன்று அந்த டால்பின் குட்டியின் சடலத்தை மீட்டனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, லா பிளாட்ட என்ற இடத்தில் இருந்து வரும் பிரான்சிச்கான என்ற வகை உலகில் மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது.

உலகில் இந்த வகை டால்பின்கள் மொத்தமே 30,000 தான் உள்ளன அதுவும் அழிந்துவருவதால் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார். இந்த டல்பின்னின் தோல் தடிமனாக இருப்பதால் உடல் விரைவில் சூடாகி நீர் சத்து குறிந்து குறைந்த நேரத்திலேயே உயிரை விடும் எனத் தெரிவித்தனர். மேலும் அரசு இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது எனவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க