• Download mobile app
05 Sep 2026, SaturdayEdition - 3860
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரும்பு பெண்மணிக்கு திருமணம்?

May 4, 2017 தண்டோரா குழு

மணிப்பூரில் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட இரோம் சர்மிளா (45) விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் ஆயுத சட்டத்தை நீக்க வலியுறுத்தி 17 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி இரும்பு பெண்மணி என பெயர் பெற்றவர் இரோம் சர்மிளா. சமீபத்தில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட இவர் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

இந்நிலையில் இரோம் சர்மிளா கடந்த 8 ஆண்டுகளாக தான் காதலித்து வந்த பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்மேண்ட் கவுடின்கோ (54) என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

மேலும் இவர்களது திருமணம் கேரளாவில் நடக்கவிருப்பதாகவும், விரைவில் டெஸ்மேண்ட் இந்தியா வந்ததும் இவர்களது திருமணம் நடக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.ஆயுதப்படை சட்டத்திற்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்று இரோம் சர்மிளா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க