• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமான ஓட்டியான பேருந்து நடத்துனரின் மகள்

May 3, 2017 தண்டோரா குழு

குஜராத்தில் பேருந்து நடத்துநரின் மகள், இன்னும் சில மாதங்களில் விமான ஓட்ட (பைலட்) உரிமம் பெற உள்ளார்.

குஜராத் மாநிலம் சுரத் நகரில் குஜராத் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துநராக பணி புரிபவர் கண்பத் படேல். இவருடைய மகள் ஐஸ்வர்யா படேல் இன்னும் சில மாதங்களில் பைலட் ஆக உள்ளார்.

ஐஸ்வர்யா படேலுக்கு வயது 21. அவர் சுரத் நகரிலுள்ள சன்ஸ்கார் பாரதி பள்ளியில் படித்தார். 12ஆம் வகுப்பு தேர்வில் 7௦ சதவீதம் மதிப்பெண் பெற்ற அவர் அதை தொடர்ந்து விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்தது முதல் இதுவரை நடைபெற்ற தேர்வில் ஒரு முறை கூட தோல்வியடையாமல் வெற்றி பெற்று வருகிறார். இன்னும் சில மாதங்களில் விமான ஓட்ட தேவையான பயிற்சிகளை முடித்து பைலட் ஆக உள்ளார்.

இது குறித்து ஐஸ்வர்யா பேசுகையில்,

“உன்னுடைய கனவுகளை மனம் தளராமல் பின் தொடர் என்று என் தந்தை என்னை எப்போதும் உற்சாகப்படுத்துவார். என்னுடைய விமான பயிற்சி படிப்பிற்கு 25 லட்சம் தேவைப்பட்டது. பேருந்து நடத்துநராக பணியாற்றிய என் தந்தையால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை.

அதனால், குஜராத் மாநிலத்தின் ஜில்லா நியமக் அலுவலகத்தின் உதவியை நாடினோம். அவர்களும் மாநில அரசின் ஒப்புதல் பெற்று எங்களுக்கு 25 லட்சத்தை கல்வி கடனாக தந்தனர். அந்த கடனுக்கு 4 சதவீத வட்டி கட்டினால் போதும் என்று தெரிவித்தனர்.

விமான பயிற்சியில் தோல்வியடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தேன். ஒரு பெரிய வணிக விமானத்தின் தளபதியாக வேண்டும் என்பது தான் என் லட்சியம்” என்றார் அவர் .

மேலும் படிக்க