• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்த வருஷம் இவங்க தான் சாம்பியன்: டிவிலியர்ஸ்!

May 3, 2017 tamilsamayam.com

இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி தான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என பெங்களூரு வீரர் டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் 40 லீக் போட்டிகள் முடிந்து விட்ட நிலையில், சில லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இத்தொடரில் இருந்து ஸ்டார் வீரர்களை கொண்ட பெங்களூரு அணி, முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த அணியின் 360 டிகிரி வீரரான டிவிலியர்ஸ், இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் அணியை கணித்துள்ளார். தவிர, இத்தொடரில் இருந்து வெளியேறியது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிலியர்ஸ் கூறுகையில்,

எதிர்பாராத விதமாக இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் எங்கள் அணியால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. ஆனால் இந்த தோல்விகளில் இருந்து பல தேவையான பாடங்களை கற்றுக்கொண்டோம். இனி எதையும் மாற்ற முடியாது. எஞ்சியுள்ள போட்டிகளை வெற்றியுடன் முடிக்க முயற்சிப்போம். தற்போது பங்கேற்கும் அணிகளில், மும்பை அணி, சமபலத்துடன் காணப்படுகிறது. அவர்கள் இந்த ஆண்டு கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். என்றார்.

மேலும் படிக்க