• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலிடத்தில் நீடிக்கும் கொல்கத்தா : வாய்ப்பை தவறவிட்ட டெல்லி

April 28, 2017 tamilsamyam.com

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 32வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெறுகிறது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் சாம்சன் 38 பந்தில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடித்து 60 ரன்கள், ஸ்ரேயஸ் ஐயர் 34க்கு 47 ரன்கள் குவித்தனர். மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்கள் மட்டும் எடுத்ததால் 20 ஓவரில் டெல்லி அணி 6 விக்கெட் 160 ரன்களை மட்டும் எடுத்தது.

கொல்கத்தாவின் கூல்டர் நைல் 4 ஓவரில் 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

கம்பீரமான கம்பிர்:

கொல்கத்தாவின் தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரேன் 4ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினார். அடுத்து இணைந்த கவுதம் கம்பிர் மற்றும் உத்தப்பா இணை மிகச் சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்தனர்.

உத்தப்பா அதிரடியாக விளையாடி 33 பந்தில் 4 சிக்ஸர்,5 பவுண்டரிகள் அடித்து 59 ரன்கள் குவித்தார். உத்தப்பா அவுட்டான பின் வந்த மணிஷ் பாண்டே 5 ரன்கள் மட்டும் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
கம்பிர் 52 பந்தில் 11 பவுண்டரிகள் விளாசி 71 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

கொல்கத்தா முதலிடம்:

புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி 9 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

மேலும் படிக்க