• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ப.பாண்டிக்கு முன் 14 குறும்படங்களை இயக்கிய தனுஷ்!

April 26, 2017 தண்டோரா குழு

ப.பாண்டி படத்திற்கு முன் 14 குறும்படங்களை இயக்கியுள்ளதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.நடிகராக சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, பாடகராகி, பாடலாசிரியராகி, தயாரிப்பாளராகி தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் தனுஷ். அவருடைய இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த ப.பாண்டி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படம் குறித்து நடிகர் தனுஷ் பேசுகையில்,

ப.பாண்டி படத்தின் முன்னோட்டமாக நான் 14 குறும்படங்களை இயக்கி பயிற்சி பெற்றேன். அதில் ஒவ்வொன்றில் இருந்தும் நான் பாடம் கற்றுக் கொண்டேன். “இன்னும் நான் இயக்குநராகத் தயாராகவில்லை என்று தான் சொல்வேன். ஒரு குருட்டு நம்பிக்கையில் இயக்கியது தான் இந்தப் படம் என்றார். மேலும்,அடுத்த திரைப்படத்தை இயக்க, அவசரப்படவில்லை என்றும் ப.பாண்டி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் எனக்கு திட்டமிருக்கிறது என்றும் தனுஷ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க