• Download mobile app
25 Feb 2026, WednesdayEdition - 3668
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருப்பட்டி ராகி கூழ்

April 24, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 1/2 கப்

கொதிக்க வைத்த பால் – 1.5 கப்

கருப்பட்டி – தேவையான அளவு

தண்ணீர் – 2 கப்

பாதாம் – சிறிது (நறுக்கியது)

ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கருப்பட்டி கரைந்ததும் இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் ராகி மாவைப் போட்டு, 2 கப் நீரை ஊற்றி கெட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் பால் ஊற்றிக் கிளறி, அடுப்பில் வைத்து, தொடர்ந்து கரண்டி கொண்டு கிளறி விட வேண்டும். ராகியானது சற்று கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் கருப்பட்டி பாகு, ஏலக்காய் பொடி மற்றும் பாதாம் சேர்த்து கிளறினால், கருப்பட்டி ராகி கூழ் ரெடி!!!

மேலும் படிக்க