• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேற்றுக்கிரக வாசியில் இருந்து வந்தவன் மனிதன். வார்னே உளறல்.

March 3, 2016 www.mirror.co.uk

கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அதிகமாக வாய் பேசி வம்பை விலைக்கு வாங்குவதிலும் வல்லவர். இவர் பல்வேறு முறை விளையாட்டில் சகி வீரர்களுடன் அதிகமாகப் பேசி கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். மேலும் பல்வேறு காரணங்களுக்காகச் சிறையும் சென்று வந்துள்ளார்.

ஆனாலும் அவரது வாய் மட்டும் நிறுத்த மறுக்கிறார். சமீபமாக அவர் தெரிவித்த கருத்து ஒன்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலேயே கிண்டலடிக்கப்படுகிறது. ஒரு பேட்டியெடுக்க வந்த பெண்ணிடம் அவர் கூறிய வார்த்தை அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியது.

மனிதன் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெறவில்லையாம், மாறாக மனிதர்கள் வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்த உயிரினங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவர்கள் எனத் தெரிவித்தார்.

இதற்குக் காரணங்கள் கூறும்போது, மனிதன் குரங்கில் இருந்து வருகிறான் எனத் தெரிவித்தால் ஏன் இதுவரை ஒரு குரங்கு கூட மனிதனாக மாறவில்லை எனக் கேட்டுள்ளார். மேலும் பிரமிடு என்பது எந்த ஒரு மனிதனாலும் கட்டமுடியாது எனவே அது ஒரு வேற்றுகிரகவசியால் மட்டுமே கட்டியிருக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரது டுவீட்டர் கணக்கில் பலரும் பலவிதமாகக் கிண்டலடித்து வருகின்றனர். ஒருவர் வார்னே வேற்று கிரகவாசி போலவே இருப்பதால் தான் அவருக்கு இந்தச் சிந்தனை வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவர் ஒரு படி மேலே போய் வேற்று கிரகவாசியில் இருந்து வார்னே உருவாவது போல கார்டூன் வரைந்து பதிவிட்டுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாகவே வார்னே தான் அந்நாட்டு மக்களின் பொழுதுபோக்காக உள்ளார்.

மேலும் அவரை மலைப்பாம்பு குட்டி ஒன்று கடித்ததையும் இவரது இந்த கமண்டையும் இணைத்தும் பல்வேறு கிண்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும் படிக்க