• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு மீண்டும் சம்மன்

April 14, 2017 தண்டோரா குழு

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து கடந்த 7- ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சோதனையில் சிக்கிய அனைவருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இதனை அடுத்து கடந்த 7 மற்றும் 8-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகினார். எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கடந்த 13-ம் அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் வரும் திங்கட்கிழமை(ஏப்ரல் 17) நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க