• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முட்டைகோஸ் – பசலைக் கீரை ஸ்டுப்டு சப்பாத்தி

April 13, 2017 tamil.webdunia.com

தேவையான பொருள்கள்:
– கோதுமை மாவு – 2 கப்
– காய்ச்சிய பால் – ½ கப்
– உப்பு – தேவையான அளவு

ஸ்டப் செய்ய:
– முட்டைகோஸ் துருவல் – ½ கப்
– வெங்காயத் துருவல் – ¼ கப்
– கேரட் துருவல் – ¼ கப்
– பசலைக் கீரை – ¼ கப் (பொடியாக நறுக்கியது)
– எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
– கொத்தமல்லி – சிறிதளவு பொடியாக நறுக்கியது
– கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள் – தலா ஒரு டீஸ்பூன்
– உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவுடன் பால், உப்பு, தண்ணீர் விட்டு மிருதுவாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காய துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு சேர்த்த பிசிறி வைத்து, 1௦ நிமிடம் கழித்து காய்கறிக் கலவையை பிழிந்து எடுத்து அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிசைந்த மாவில், கொஞ்சம் மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து, அதனுள் பூரணம் வைத்து மூடி சற்று கனமான சப்பாத்திகளாக உருட்டவும். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து, தேய்த்த சப்பாதிக்களை சுட்டெடுக்கவும். சுவையான சத்தான முட்டைகோஸ் பசலைக் கீரை சப்பாத்தி தயார்.

மேலும் படிக்க