• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் இரத்த கையெழுத்திடும் நூதன போராட்டம்

April 12, 2017 தண்டோரா குழு

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட விவசாயிகள் இரத்த கையெழுத்திடும் நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கோவை சிவானந்த காலணி பகுதியில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத்தின் போது இரத்தத்தில் கைரேகையிடும் நூதன போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து ஒரு மாதமாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, இரண்டு லட்சம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்ப உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டிய விவசாயிகள், உத்திரபிரதேச மாநிலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்தது போல தமிழகத்திலும் செய்ய வேண்டுமெனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க