• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேற்று ஆதரவு இன்று சோதனை

April 7, 2017 தண்டோரா குழு

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் அலுவலகம், உறவினர்கள் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருந்த சரத்குமாரை அதிமுக அம்மா அணிக்கு அழைத்து வர முக்கிய காரணமாக இருந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர். இதனால் அதிக பணம் கைமாறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை கொட்டிவாக்கத்தில் சரத்குமார் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நேற்று அதிமுக (அம்மா) அணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க