• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸி.யை அரட்டிய அஷ்வின் அடுக்கடுக்காக சாதனை!

March 8, 2017 tamilsamayam.com

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், பிஷன் சிங் பேடியின் சாதனையை சமன் செய்தார்.

இந்தியா வந்துள்ள அஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்டில், இந்திய வீரர் அஷ்வின் அரட்டிவுட, இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. அஷ்வின் இரண்டாவது இன்னிங்சில் 12.4 ஓவர்கள் வீசி, 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அஷ்வின் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 25-வது முறையாகும்.

மேலும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில், பிஷன் சிங் பேடியை முந்தி 5வது இடத்தையும் அஷ்வின் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க