• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று மொழிகள் தயாராகும் “பாகுபலி” பிரபாசின் அடுத்த படம்..!

March 8, 2017 tamilsamayam.com

நடிகர் பிரபாஸ் நடிக்க உள்ள புதிய படமானது தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படமாக்கப்பட உள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ்,பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.அவரது அடுத்த படமான பாகுபலி இரண்டாம் பாகத்தை இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிக்க உள்ள புதிய படம் மூன்று மொழிகளில் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்தில் நீல் நிதின் முகேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும்,மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தை சுஜீத் என்பவர் இயக்க உள்ளதாகவும் தெரிகிறது.

தற்போது விவேக் ஓபராய் அஜித் நடிக்கும் ‘விவேகம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க