• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளேன் சுசித்ரா

March 7, 2017 tamilsamayam.com

தமிழ் சினிமா பிரபலங்களின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாடகி சுசித்ரா.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

எனது டுவிட்டர் அக்கவுண்டில் கிட்டத்தட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இதில் யாரோ என்னுடைய அக்கவுண்டை ஹேக் செய்துவிட்டார்கள்.

இது தொடர்பாக நான் டுவிட்டர் நிர்வாகத்திடம் எனது அக்கவுண்டை மூடும்படி கடிதம் அனுப்பினேன். சில தினங்களுக்கு முன்பு தனுஷ் தரப்பிலிருந்து எனக்கு போன் வந்தது. அதில் உங்களது டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

அதன் பிறகு தான் டுவிட்டரில் வந்தவற்றை நீக்க முயற்சித்தேன், ஆனால் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. யாரோ பழிவாங்க இதனை செய்து வருகின்றனர். நானும், எனது கணவர் கார்த்திக்குமாரும் கிட்டத்தட்ட 10 வருடங்களாக குடும்பம் நடத்தினோம். தற்போது அந்த வாழ்க்கை விவாகரத்து நோக்கி செல்கிறது.

நான் இப்போது த்ரிஷா நடிக்கும் படத்தில் பாடுகிறேன். அதனை இப்போது ஒலிப்பதிவு செய்துவிட்டுத்தான் வந்தேன். ஆனால், நான் மருத்துவமனையில் இருப்பதாக பேசுகிறார்கள். இது என்னுடைய சொந்த வாழ்க்கை. இது பற்றி நான் விளக்க தேவையில்லை. இது எனது விவாகரத்துடன் தொடர்புடையது. பூமியில் ராமரைப்போல் எனது கணவரை நான் பார்க்கிறேன். ஆனாலும், எங்களது வாழ்க்கை இப்போது விவாகரத்து நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த டுவிட்டர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தால், விவாகரத்து தடுக்கப்படலாம் என்று நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க