• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

”அஜித் படத்தை திரையிட்டால் தியேட்டரை கொழுத்துவேன்” – கன்னட நடிகர் திமிர் பேச்சு..!

March 3, 2017 tamilsamayam.com

”என்னை அறிந்தால் படத்தை கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிட்டால் தியேட்டர்களை கொழுத்துவேன்” என பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ் தெரிவித்துள்ளார்.

கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்,கன்னடத்தில் டப் செய்யப்பட்டு இன்று வெளியிடப்பட உள்ளது.கன்னடத்தில் ‘சத்யதேவ் ஐ.பி.எஸ்’ என்ற பெயரில் இந்த படமானது டப் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வெளியீட்டிற்கு கன்னட திரையுலகினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.வேற்று மொழி படங்கள் கன்னடத்தில் டப் செய்யப்பட்டால்,கன்னட திரைப்படங்களின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என கன்னட திரையுலகினர் கூறுகின்றனர்.இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவை சந்தித்து அவர்கள் கோரிக்கை மனுவையும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் கன்னட நடிகரான ஜக்கேஷ் என்பவர்,என்னை அறிந்தால் திரைப்படத்தை டப் செய்து வெளியிட உள்ள கர்நாடக தியேட்டர்களை தீயிட்டு கொழுத்துவேன் எனவும் அதற்காக சிறைக்கு செல்ல தான் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக வாட்டாள் நாகராஜ் தலைமையில் வரும் மார்ச் 11-ஆம் தேதி பேரணிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க