• Download mobile app
20 Jul 2026, MondayEdition - 3813
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இட்லி கபாப்

November 10, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

பட்டன் இட்லி – பத்து.

வெங்காயம் – ஒன்று (வட்டமாக நறுக்கியது).

தயிர் – இரண்டு டேபிள் ஸ்பூன்.

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்.

தனியா தூள் – கால் டீஸ்பூன்.

கரம் மசாலா – கால் டீஸ்பூன்.

சர்க்கரை – கால் டீஸ்பூன்.

உப்பு – ஒரு சிட்டிகை.

இடித்த பூண்டு – இரண்டு பல்.

எண்ணெய் – தேவையான அளவு.

குடை மிளகாய் – ஒன்று (வட்டமாக நறுக்கியது).

கபாப் ஸ்டிக் – இரண்டு.

செய்முறை

ஒரு கிண்ணத்தில் தயிர், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, இடித்த பூண்டு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.பிறகு, அதில் இட்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின், தவாவில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் கபாப் ஸ்டிக் எடுத்து அதில் குடை மிளகாய் ஒரு துண்டு, இட்லி இரண்டு, வெங்காயம் ஒன்று, இட்லி இரண்டு, குடை மிளகாய் ஒன்று ஆகியவற்றை ஒவொன்றாக சொருவி தவாவில் வைத்து சிறு தீயில் வைத்து திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.

மேலும் படிக்க