• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள் நான் – நடிகை பாவனா

February 28, 2017 தண்டோரா குழு

“துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள் நான். அவற்றிலிருந்து மீண்டு வருவேன்” என்று நடிகை பாவனா உருக்கமாக கூறியுள்ளார்.

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17- ஆம் தேதி காரில் திருச்சூருக்கு வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த 5 பேரால் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்.

இது குறித்து பாவனா அளித்த புகாரின்பேரில், நெடும்பாசேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின், முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில், விஜேஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து “இன்ஸ்டாகிராம்” சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் பாவனா.

அதில், “வாழ்க்கை என்னைச் சிலமுறை கீழே தள்ளியுள்ளது. நான் பார்க்க நினைக்காத விஷயங்களை அது காண்பித்துள்ளது. துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள் நான்.ஆனால் ஒன்று, அவற்றிலிருந்து நான் எப்போதும் மீண்டுவருவேன். உங்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க