• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டை காப்பாற்ற ஸ்டாலினால்தான் முடியும் – ராதாரவி

February 28, 2017 தண்டோரா குழு

அதிமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும் நடிகருமான ராதாரவி திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.

திமுகவில் இணைந்த பின்னர், பேசிய அவர், “தமிழ்நாட்டைக் காப்பாற்ற ஸ்டாலினால்தான் முடியும்” என்று கூறினார்.

திமுகவில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராதாரவி, “திமுகவில் இணைந்திருப்பதன் மூலம் தாய் வீட்டில் இருப்பதாக உணர்கிறேன். எனது தாயார் மரணமடைந்த நிலையில், தைரியமாக வந்து ஆறுதல் சொன்னவர் ஸ்டாலின். தமிழகத்தில் வேறு தலைவர்கள் யாரும் இல்லை. அதனால் திமுகவில் இணைந்துள்ளேன். திமுக விரைவில் ஆளுங்கட்சியாக மாறும். தமிழ்நாட்டை ஸ்டாலினால் மட்டுமே காப்பாற்ற முடியும். திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி” என்று கூறினார்.

மேலும் படிக்க