• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடியை முதல்வர் சந்தித்தது அரசு முறை சந்திப்‌புதான் – தமிழிசை சவுந்தரராஜன்

February 25, 2017 தண்டோரா குழு

“தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது அரசுமுறை சந்திப்‌புதான்” என்று பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி சிவன் சிலை திறப்பு மற்றும் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் கடந்த 24-ம் தேதி பங்கேற்க பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் பிரதமர் மோடி தில்லி கிளம்பும் முன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரைத் தனியாகச் சந்தித்துப் பேசினார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, பிரதமருடன் அவர் சந்தித்துப் பேசியது இதுவே முதன்முறையாகும். “நீட்” தேர்வுக்கு விலக்கு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்பட்டது.

எனினும், நிகழ்ச்சிக்காகப் பங்கேற்க வந்த பிரதமரிடம் முதலமைச்சர் தனியாகச் சந்தித்துப் பேசியது மற்ற கட்சியினரிடமும், சமூக ஆர்வலர்களிடமும் பல தரப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என தகவல் வெளியானது.

இது குறித்து நிகிழ்ச்சியில் பங்கேற்க வந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் செய்தியாளர்களிட‌ம் சனிக்கிழமை பேசுகையில், “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியைச் சந்தித்தது அரசு முறை சந்திப்புதான். அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை” என்றார்.

மேலும் படிக்க