• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிறந்த நாளில் சிவகார்த்திகேயனுக்கு ”வேலைக்காரன்” பரிசளிப்பு!!

February 17, 2017 tamilsamayam.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி நடிப்பில் தான் இயக்கி வரும் படத்திற்கு ”வேலைக்காரன் என்று இயக்குநர் மோகன் ராஜா பெயர் வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும், பிரபல இயக்குநருமான மோகன் ராஜா இயக்கிய ‘தனி ஒருவன்’ பலத்த வெற்றியை பெற்றது. இந்த வெற்றிப் படத்திற்குப் பின்னர் தற்போது சிவகார்த்திகேயன், நயன்தாரா,பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு தனி ஒருவன் 2ஆம் பாகம் என்று பெயர் வைப்பார் என்று கூறப்பட்டது. மேலும் இந்தப் படத்திற்கான பெயரை சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று இந்தப் படத்திற்கு வேலைக்காரன் என்று பெயரிட்டுள்ளார். இதை மோகன் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரெமோ படத்தைத் தயாரித்த 24 ஏஎம் ஸ்டியோஸ் ராஜா தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். ‘வேலைக்காரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் எனறும் அறிவித்துள்ளார். ரெமொவுக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் தற்போது இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க