• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலாவை கலாய்க்கும் கமல்

February 16, 2017 tamilsamayam.com

அதிமுக பொதுச் செயலாளரான சசிகலாவை,தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

டிவிட்டர் பக்கம் துவங்கியதிலிருந்து எப்போதாவது பதிவிட்டு வந்த நடிகர் கமல்ஹாசன்,ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் போது ஆக்டிவாக செயல்படத் துவங்கினார்.மேலும் ஜல்லிக்கட்டுக்கான தனது ஆதரவை மிகவும் ஆணித்தரமாகவும் எடுத்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சசிகலாவுக்கும்,ஓ.பன்னீர் செல்வத்திற்கு இடையில் நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியில் ஓ.பி.எஸ்க்கு கமல் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் ,சசிகலாவை மறைமுகமாக கலாய்த்துள்ளார்.
“107 செயற்கை உறுப்பினரை ஏவியவரை விட,104 செயற்கைக் கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர்.வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழியபாரத மணித்திருநாடு..!”என கமல்ஹாசன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதில் 107 செயற்கை உறுப்பினர்கள் என,கூவத்தூரில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ க்களையும்,செயற்கை உறுப்பினர்களை ஏவியவர் என சசிகலாவைவும் மறைமுகமாக கமல் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் படிக்க