• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்பாவி தம்பதியரின் சொத்துகளை அதிமுக எம்.பி. அபகரிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் புகார்

February 13, 2017 தண்டோரா குழு

தங்களது சொத்துகளை கள்ளக்குறிச்சி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அபகரித்ததுடன் குண்டர்களை வைத்து மிரட்டுவதாகவும் தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சவிதா, ராஜமாணிக்கம். இவர்களுக்குச் சொந்தமாக அப்பகுதியில், 11 செண்ட் இடம் உள்ளது. அதைக் கள்ளக்குறிச்சி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் அபகரித்துக் கொண்டிருப்பதாகவும், அந்த இடத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜமாணிக்கம்,

“கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி. காமராஜ் எனது நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துள்ளார். 20 குண்டர்களை வைத்து தங்களை வீட்டை விட்டுக் காலி செய்யுமாறு மிரட்டி வருகிறார். மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளைத் தூண்டித்து அட்டகாசம் செய்து கிறார். இதைத் தடுக்கவேண்டும், அபகரித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

“இது குறித்து காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் அளித்த போதும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை” என்றும் புகார் கூறினார் அவர்.

மேலும் படிக்க