• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெயிலில் மூளை குழம்பிய முஷ்பிகுர்!

February 13, 2017 tamilsamyam.com

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில், மூளை குழம்பியவர் போல வங்கதேச கிரிக்கெட் கேப்டன் முஷ்பிகுர் அவுட்டானார்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. ஹைதராபாத்தில் நடக்கும் இந்த டெஸ்டில், இந்திய அணி, முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 687 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

வங்கதேச அணி, 388 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து வங்கதேச அணிக்கு, 459 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணிக்கு, ஷாகிப் (22) ஏமாற்றினார். இதன்பின் வந்த வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹீம், கொஞ்சம் கூட பொறுப்பில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அஷ்வின் பவுலிங் செய்ய துவங்கியது முதல் கொஞ்சம் கூட தேவையில்லாத அதிரடி ஆட்டத்தில் குதித்த முஷ்பிகுர், ஏற்கனவே விக்கெட்டை இழந்து தத்தளிக்கும் அணியை மீட்டு எடுக்க முயற்சிக்காமல், தேவையில்லாமல் தனது விக்கெட்டை பறிகொடுத்து அவுட்டானார். இதனால் வர்னணையாளர்கள், வெயிலில் அவருக்கு மூளை குழம்பிவிட்டதாக விமர்சித்தனர்.

மேலும் படிக்க