• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி வரும் போது வரட்டும்.. கமல், விஜய், அஜீத்தையும் விடாதீங்க: பா.ஜ., பிளான் !

February 13, 2017 tamilsamayam.com

குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் பா.ஜ.,வுக்கு இணை வேறு யாருமில்லை என்றே சொல்லலாம்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தற்போதைய தமிழக அரசியல். 7 எம்.எல்.ஏ.,க்களை வைத்துக் கொண்டு முதல்வராக தொடரும் ஓ.பி.எஸ்., ஒருபுறம். 127 எம்.எல்.ஏ.,க்களை கூவத்தூரில் அடைகாத்து வைத்தும், முதல்வராக முடியாமல் தவிக்கும் சசிகலா. இது ஒருபுறம் இருக்க அரசியலில் அடுத்த கட்ட காய் நகர்த்தல்களை துவங்கியுள்ளது பா.ஜ.

எப்படியாவது தங்கள் கட்சிக்கு பிரபல நட்சத்திரத்தை தமிழக பா.ஜ., தலைவராக்கி விட வேண்டும் என அக்கட்சி மும்முரமாக உள்ளது. அதனால், ரஜினிகாந்தை தலைவராக்கிவிட வேண்டும் என்பது பா.ஜ.,வின் கனவு. ஆனால் ரஜியோ திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறார்.

இதனால் அவர் வரும் போது வரட்டும், என முடிவு செய்துள்ள பா.ஜ., அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நடிகர்கள் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளது.

இதனால் கமல், சரத்குமார், விஜய், அஜீத் ஆகியோருடன் பேசி வருகிறார்களாம். இதை பா.ஜ., ஆதரவுப் பத்திரிகை ஒன்று உறுதி செய்துள்ளது.

கமல் அவ்வப்போது பொன் ராதா, தமிழிசை ஆகியோருடன் தொடர்பில் உள்ளார் என பேசப்படுகிறது. மோடி தமிழகம் வந்த போது விஜய்யை நேரில் சந்தித்தார். ஆனால் ‘தல’ அஜீத் மட்டும் பிடிகொடுக்கவே மாட்டேன் என்கிறார் என பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க