• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் – மதுசூதனன்

February 10, 2017 தண்டோரா குழு]

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு மிக விரைவில் தேர்தல் நடத்தப்படும் என அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் அறிவித்தார்.

அதிமுக அவைத்தலைவர் பதவியிலிருந்து மதுசூதனன் நீக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இல்லத்தில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

”அதிமுக பொதுச் செயலாளராக இருப்பதற்குத் தகுதியற்றவர் சசிகலா. சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது அதிமுகவின் சட்ட விதிமுறைகளின்படி செல்லாது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பதைக் கட்சிக்காகக் கொடியைக் கட்டும் பாமரத் தொண்டன் தேர்ந்தெடுப்பான். எனவே, அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும்.

ஆகையால், கழகத்தொண்டர்கள் தேர்தலுக்குத் தயாராக இருக்க வேண்டும். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக கட்சியின் சொத்துகளைப் பராமரிப்பதற்காகக் கழகச் சொத்து பாதுகாப்புக் குழுவை கூடிய விரைவில் பொதுக்குழு அறிவிக்கும்”

இவ்வாறு மதுசூதனன் கூறினார்.

அதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம், “உங்களை அவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக சசிகலா அறிவித்துள்ளாரே…” என்று கேட்டதற்கு, “அதற்கு முன்னதாகவே நாங்கள் அவரைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டோம்” என பதிலளித்தார்.

மேலும் படிக்க