November 20, 2026
தண்டோரா குழு
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும், சேவைகளைப் பெறும் மெசேஜிங் தளமாக வாட்ஸ்அப் உருவெடுத்துள்ளது.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும், வர்த்தகம் தொடர்பாக நிறுவனங்களிடம் பேசவும், குடிமக்களுக்கான சேவைகளைப் பெறவும், மெட்ரோ டிக்கெட் முதல் இன்சூரன்ஸ் வரை அனைத்தையும் செயலியை விட்டு வெளியேறாமலேயே வாங்கவும் இது எளிய வழியாக இருந்து வருகிறது.
வாடிக்கையாளர்கள் இன்று வாட்ஸ்அப்பையே தங்களின் முதன்மைத் தகவல் தொடர்பு வழியாகப் பயன்படுத்தி வருவதால், நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுடன் இணைந்து செயல்பட இந்தத் தளத்திற்கு மாறியுள்ளன.நிறுவனங்களின் கூட்டு செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கான காலக்கெடு முதல் செலவுத் திட்டமிடல், டெம்ப்ளேட் ஒப்புதல்கள் மற்றும் அனைத்துக் குழுக்களிலும் இடையூறு இல்லாத சீரான வாடிக்கையாளர் அனுபவம் வரை — வணிக நிறுவனங்கள் தினமும் பல்வேறு சவால்களைக் கையாள்கின்றன.
மேலும் இவற்றை எளிதாக கையாள்வதற்கு அவை வாட்ஸ்அப்பின் உதவியைப் பெரியளவில் நம்பி இருக்கின்றன.இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வி -யின் கார்ப்பரேட் பிரிவான வி பிசினஸ், அனைத்து அளவிலான வணிக நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே அதிகம் விரும்பும் ஒரு தளத்திலேயே வாடிக்கையாளர்களுடனான தகவல் பரிமாற்ற தொடர்புகளைத் தானியக்கமாக்கவும், தனிப்பயனாக்கவும் மற்றும் விரிவுபடுத்தவும்) உதவும் வகையில் ‘வாட்ஸ்அப் பிசினஸ் சொல்யூஷன்ஸ்’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அறிமுகம் குறித்து வோடஃபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தின் சீஃப் என்டர்பிரைஸ் பிசினஸ் அதிகாரி எம்.பி.சுனில் குமார் கூறுகையில்,
“வாடிக்கையாளர்களுடனான தகவல் பரிமாற்றம், செயல்பாட்டு நடைமுறைகளின் எதிர்காலம் உரையாடல் சார்ந்ததாகவும், அறிவுசார்ந்ததாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வழிநடத்துவதாகவும் மாறிவருகிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் செயலிகளிலேயே நிறுவனங்களின் சேவைகளை கிடைக்கப்பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பதால், அந்தப் பயணத்தில் வாட்ஸ்அப் ஒரு முக்கிய அங்கமாகி வருகிறது. வி பிசினஸ் -ல், நிறுவனங்கள் வெறும் வாட்ஸ்அப்பில் மட்டுமே இருப்பதைத் தாண்டி, பெரிய அளவில் அறிவுசார்ந்த, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் தொடர்பில் இருக்கச் செய்யும் வாடிக்கையாளர் அனுபவங்களை உருவாக்க நாங்கள் உதவுகிறோம்.
எங்கள் வாட்ஸ்அப் பிசினஸ் சொல்யூஷன்ஸ் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியக்கம் , ஆம்னிசேனல் வாயிலான செயல்பாட்டுத் திறன்கள், மிக உயர் தர மெட்டா ஆதரவு மற்றும் தடையற்ற சிபிஏஏஎஸ் மற்றும் சிசிஏஏஎஸ் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கொண்டுவருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 15 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் இணைவதில் இருந்து, பெரிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் தொடர்பை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வது வரை, வெறும் உரையாடலில் இருந்து வாடிக்கையாளர் – நிறுவனம் இடையேயான அர்த்தமுள்ள பயணத்தை நாங்கள் எளிதாக்குகிறோம்.
வணிக நிறுவனங்களை வாடிக்கையாளர்களுடன் மேலும் சுலபமாக தொடர்பில் இருக்கச் செய்வதாகவும், அறிவுசார்ந்ததாகவும், எதிர்காலத்திற்குத் தயாராகவும் மாற்றுவதே எங்களின் நோக்கம்,” என்று கூறினார்.