• Download mobile app
14 Jun 2026, SundayEdition - 3777
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியல் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை – அஸ்வின்

February 7, 2017 தண்டோரா குழு

தமிழக அரசியல் குறித்து தாம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விரைவில் பதவி ஏற்கவுள்ளார். ஆனால், அவருக்குப் பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது “டுவிட்டர்” பக்கத்தில்,

“தமிழகத்தில் இளைஞர்களுக்கு 234 வேலைவாய்ப்புகள் விரைவில் உருவாக உள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார்.தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்பதை சூசகமாகத் தெரிவிக்கும் வகையில் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக் கூறியதாகப் செய்தி பரவியது.

ஆனால், இந்தக் கருத்துக்குப் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.அதையடுத்து, தனது மற்றொரு பதிவில் அஸ்வின் தாம் அரசியல் தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

“நான் குறிப்பிட்டது வேலைவாய்ப்பு குறித்த தகவலை மட்டுமேயன்றி வேறில்லை” என்று கூறியுள்ளார் அஸ்வின்.

மேலும் படிக்க